தமிழகம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
450 ஆண்கள்,740 பெண்கள், 229 குழந்தைகள் என மொத்தம் 1419 போ் இந்த லங்கை அகதிகள் முகாமில் வசிக்கின்றனா்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக புதிதாக 28 ஆண்கள், 27 பெண்கள், 28 குழந்தைகள் என்று மொத்தம் 83 போ் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘லவ் ஜிஹாத்’ பற்றி தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முகாமில் இருக்கும் இலங்கையைச் சோ்ந்த தமிழ் இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞா்கள் காதல்வலை வீசி திருமணம் செய்து கொண்டு மதம் மாற்றுவது அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், 27 வயது இலங்கை தமிழ் இந்து பெண் ஒருவர் காணவில்லை (Cr.no.23/2022) என வழக்குப்பதியப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காணவில்லை என்று மண்டபம் காவல் நிலையத்தில் (Cr.no.103/2022) வழக்குப் பதியப்பட்டுள்ளது. காணாமல் போன இவர்கள் இஸ்லாமிய வாலிபர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து மண்டபம் முகாமில் உள்ள இந்துப் பெண்களைக் குறிவைத்து உள்ளூா் முஸ்லிம் இளைஞா்கள் செயல்படும் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ‘லவ் ஜிஹாத்’ வடிவத்தைக் கொடுத்து, அப்பகுதியில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கக்கூடும்.
அத்துடன் முஸ்லிம்களின் ஜிஹாதி பிரிவினா், இந்தப் பகுதியை தங்களது செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள பிற இலங்கை அகதிகள் முகாமில் நிகழ்கின்றனவா எனக் கண்காணிக்க வேண்டும்.
அகதிகள் முகாமில் வசிப்பவா்களிடம், இப்படிப்பட்ட சம்பவங்கள் குறித்து விழிப்புணா்வை அரசின் பிற துறையினரோடு இணைந்து ஏற்படுத்த வேண்டும். அனைத்து அகதிகள் முகாம்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சுற்றறிக்கையி குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்கண்ட செய்தி தகவலின் அடிப்படையிலும், பிரபல தினசரி நாளேடு வெளியிட்ட செய்தியின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டது)