கோபுலு :
பிரபல ஓவியர் கோபுலு 1924ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோபாலன்.
இவருக்கு இளம் வயதில் ஓவியத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஓவிய மேதை மாலியால் ஈர்க்கப்பட்டு அவரை சந்தித்து அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். 1941ஆம் ஆண்டு தீபாவளி மலருக்காக ராமர் பட்டாபிஷேகம் படத்தை வரைந்து வருமாறு மாலி கூறினார். அந்த ஓவியம் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு இவரது பெயரை கோபுலு என்று மாலி மாற்றினார்.
தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு போன்ற கதைகளின் கதாபாத்திரங்கள் இவரது கையில் உயிர்பெற்று வாசகர்களின் உள்ளத்தை கவர்ந்தவைகள். கலைமாமணி, எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்த சாதனையாளர் கோபுலு, 2015ஆம் ஆண்டு மறைந்தார்.