அகமதாபாத் : பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்த நாளை ஒட்டி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி காந்தி நகரில் உள்ள வீட்டில் தாயாரை நேரில் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி தாய்க்கு மாலை அணிவித்து காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். முன்னதாக தாயுடன் பூஜை செய்துவிட்டு. பின்னர் அவர் பாதங்களைக் கழுவி பாதை பூஜை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக் கொண்டார். பின்னர், அவருக்கு மாலையும், ஷால்வையும் அணிவித்தார்.தாயாருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பிரதமர், சிறிது நேரம் தாயாருடன் பேசிய பின் புறப்பட்டுச் சென்றார். மோடியின் தாயாரான ஹீராபென்னின் 100வது பிறந்த நாளை ஒட்டி குஜராத்தில் ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு அவரது பெயரை வைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ. 21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் பிறந்தநாளை ஒட்டி புரி ஜகநாதர் கோயிலில் சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.