திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதுகுறித்த முழுத்தகவல்கள் இங்கே!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய வார்டு எண் 38, 39, 43, 40, 41 மற்றும் 42வது வார்டுக்குட்பட்ட காட்டூர் திருவரம்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவரம்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் உள்ள குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தரைமட்ட தொட்டிகள் மராமத்து பணி நடைபெற உள்ளது.
எனவே திருவரம்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்தியலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சத்திடல், சக்தி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூர், கே.கே.கோட்டை, அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர், பாத்திமாபுரம், முருகன் கோவில் தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 18 முதல் 20 ஆம் தேதி வரை குடிநீர் விநஅயோகம் இருக்காது.
எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொருத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு குடி நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“