இந்தோனேசியா நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து அதற்கு பதிலாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான பண்டமாற்று பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக பாமாயில் விலை உச்சத்திற்கு சென்று வருகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் காட்டும் பாதிப்பில் உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்தியாவுக்கு பாமாயில் அதிகம் ஏற்றுமதி செய்யும் இந்தோனேஷியா ஏற்றுமதியை தடை செய்ததால் இந்தியாவில் பாமாயில் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் பாமாயில் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக இந்தோனேசியாவுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பண்டமாற்று முறை
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் பண்டமாற்று முறையில் இருநாடுகளும் கோதுமை மற்றும் பாமாயிலை பரிமாறி கொள்ளும் என்றும், இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் எண்ணெய் வித்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளில் எண்ணெய் வித்துக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியா
உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடான இந்தோனேசியா உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டு பாமாயிலை ஏற்றுமதி செய்ய கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தடை விதித்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டதால் அதன் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதிக்கு தடை
இந்தோனேசியா ஏற்றுமதிக்கு தடை விதித்ததை அடுத்து வேறு பல நாடுகளில் இருந்து இந்தியா, சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்தாலும் இந்தியாவின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இருப்பினும் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதால் ஓரளவு சமையல் எண்ணெய் விலை கட்டுக்குள் வந்தது. இருப்பினும் இந்தோனேசியா ஏற்றுமதி தடையை நீக்கினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு முழு தீர்வு காண முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தியா-இந்தோனேஷியா
இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின்படி இந்தோனேசியாவுக்கு தேவையான கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்யும் என்றும் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு தேவையான பாமாயிலை இந்தோனேசியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை
சமீபத்தில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்ததை அடுத்து இந்தோனேசியாவுக்கு கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த பேச்சுவார்த்தையில் இரு அந்நாடு உடன்பாடு செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை – பாமாயில்
இந்தோனேசியாவுக்கு கோதுமையின் தேவை அவசியம் என்பதாலும், இந்தியாவுக்கு பாமாயில் தேவை அவசியம் என்பதாலும் இந்த பேச்சுவார்த்தை நல்ல முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருநாடுகளும் விரைவில் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதன் காரணமாக மீண்டும் பழைய விலைக்கு சமையல் எண்ணெய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
India planned to export wheat instead of palm oil with Indonesia
India planned to export wheat instead of palm oil with Indonesia | நீங்க பாமாயில் தாங்க, நாங்க கோதுமை தருகிறோம்: இந்தோனேஷியாவிடம் இந்தியா பண்டமாற்று பேச்சுவார்த்தை!