India post recruitment 2022 for 38926 GDS posts results status and cut off details: போஸ்ட் ஆபிஸின் ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், ரிசல்ட்டை எப்படி தெரிந்துக் கொள்வது, கட் ஆஃப் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி, இந்த ஆண்டு கட் ஆஃப் எவ்வளவு எதிர்ப்பார்க்கலாம் போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் 38,926 கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இவ்வளவு பணியிடங்கள்: நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?
இதற்கான விண்ணப்பச் செயல்முறை கடந்த ஜூன் 5 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த பணியிடங்கள், தேர்வு இல்லாமல் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படும் என்பதால், முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்வேறு வட மாநிலங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்திற்கு விரைவில் ரிசல்ட் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரிசல்ட் தெரிந்துக் கொள்வது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
அடுத்ததாக ஆட்சேர்ப்பு முடிவு (Recruitment Results) பகுதிக்குச் செல்லவும்.
இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் 2022 என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.
PDF வடிவில், இந்தியா போஸ்ட் GDS 2022 முடிவுகளைப் பதிவிறக்க என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இந்தியா போஸ்ட் GDS “ஆஃபர் ஆஃப் அப்பாயின்மென்ட்” க்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் அனைத்து பெயர்கள் மற்றும் விண்ணப்ப எண்கள் PDF இல் இருக்கும்.
இந்தியா போஸ்ட் GDS முடிவுகளின் PDF பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அடுத்த சுற்றுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.
கட் ஆஃப் எவ்வளவு?
கடந்த ஆண்டு போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு தேர்வானவர்களில் பெரும்பாலானோர் 97 சதவீத மதிப்பெண்களுக்கு பெற்றுள்ளவர்கள். ஒரு சில இடங்களில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதில் பொதுப்பிரிவு, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவுகளுக்கு ஏற்ப மதிப்பெண் சதவீதம் மாறுபடுகிறது.
இதன்மூலம் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது தெரிகிறது. அதேநேரம் கடந்த முறை 20 முன்னுரிமைகள் மட்டுமே தேர்வு செய்ய முடிந்த நிலையில், இந்த முறை சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் பொதுப்பிரிவு மற்றும் சாதிப் பிரிவு வாரியான அனைத்து இடங்களையும் முன்னுரிமையாக கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனவே இந்த முறையும் பத்தாம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கே வேலை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உங்களது சாதிப் பிரிவுக்கு ஏற்ப இந்த மதிப்பெண் சதவீதம் குறையலாம். எனவே குறைவான மார்க் எடுத்தவர்களும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் அப்ளை செய்து கொள்ளுங்கள்.