டிடிஎஸ் புதிய விதிமுறைகளின்படி மருத்துவர்கள் பரிசு பொருட்கள் வாங்கினால் கூட அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் டிடிஎஸ் விதிமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் அளிக்கும் இலவச பொருள்கள், இலவச மருந்து மாத்திரைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம் கோடி ஹோகயா.. அடுத்தது என்ன நடக்கும்.. சென்செக்ஸ் உயருமா..?!
பரிசு பொருட்களுக்கு டிடிஎஸ்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் போது வருவாய் வீணாவதை தடுக்கும் வகையில் பரிசுப் பொருள்கள், இலவச பொருட்கள் பெறும்போது டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
10 சதவீதம் டிடிஎஸ்
இதன்படி ஒருவர் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தொழில் ரீதியாக அல்லது வர்த்தக ரீதியாக பரிசு பொருட்கள் கிடைக்கப் பெற்றால் அந்த பொருட்களின் மதிப்பில் 10 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை சட்டத்தில் புதிய விதி சேர்க்கப்பட்டது.
சமூக வலைத்தள பிரபலம்
அதேபோல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஒருவர் பிரபல நிறுவனங்களின் பொருளை பிரபலப்படுத்துவதற்காக ஒரு பொருளை பெற்று அதனை அவர் தக்க வைத்துக் கொண்டால், அந்த பொருளின் மதிப்புக்கு வருமான வரி சட்டத்தின் படி டிடிஎஸ் பிடிக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் அவர் அந்த பொருளை திரும்ப ஒப்படைத்து விட்டால் டிடிஎஸ் பிடித்தம் கிடையாது.
மருத்துவர்களுக்கு டிடிஎஸ்
அதேபோல் மருத்துவர்கள் இலவச மருந்து மாத்திரைகளை மருந்து நிறுவனங்கள் கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த இலவச மருந்து மாத்திரைகளை மருத்துவர் விற்பனை செய்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுப்பொருட்களோ
மேலும் மருந்து நிறுவனத்தால் மருத்துவர்களுக்கு இலவச சாம்பிள் மட்டுமின்றி பரிசுப்பொருட்கள் கொடுத்தாலும் டிடிஎஸ் பிடிக்கப்பட்டு அது மருத்துவரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச்சட்டம்
வருமான வரிச் சட்டத்தின் படி ஒரு நபர் தள்ளுபடி மூலம் பலன் பெற்றாலோ, ரொக்கம் அல்லது சுற்றுலா பேக்கேஜ் தள்ளுபடிகள் பெற்றாலோ அல்லது உறவினர்கள் மூலம் பரிசு பெற்றாலோ அதுவும் டிடிஎஸ் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடிக்கு டிடிஎஸ் இல்லை
ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் தரும் சிறப்பு தள்ளுபடி உள்பட பல்வேறு சலுகைகளுக்கு டிடிஎஸ் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிடிஎஸ் விதிமுறைகள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
CBDT Issues new guidelines for TDS Provision to Doctors!
CBDT Issues new guidelines for TDS Provision to Doctors! | மருத்துவர்கள் பரிசுப்பொருள் வாங்கினால் டிடிஎஸ்: விதிகளில் திடீர் மாற்றம்!