இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவைகளும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பது போலவே பல புதிய பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஸ்விக்கி
ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் உணவு பொருட்களை ஆர்டர் செய்த பெண்ணுக்கு தகாத மெசேஜ்-களை அனுப்பியுள்ளது தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனங்களும் அதிரடியாக டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்
ப்ராப்தி என்ற பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வாயிலாகப் பொருட்களை வாங்கியுள்ளார். பொதுவாக ஸ்விக்கி, சோமேட்டோ செயலியில் Phone Number Masking தொழில்நுட்பம் இருக்கும் இதன் மூலம் டெலிவரி ஊழியரின் மொபைல் எண்ணும் சரி, வாடிக்கையாளர் நம்பரும் சரி பார்க்க முடியாது.
தகாத மெசேஜ்
ஆனால் பிராப்தி மறந்து போய் இயல்பாகச் செய்யப்படும் கால் வாயிலாகச் செய்துள்ளார். இதன் வாயிலாகப் பிராப்தி மொபைல் எண் பெற்ற ஸ்விக்கி ஊழியர், அவருக்கு “Miss you lot” மற்றும் “nice your beauty, wonderful behaviour,” போன்ற பல தகாத மெசேஜ்-களை வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
டிவிட்டர் பதிவு
இதில் கடுப்பான பிராப்தி டிவிட்டரில் பல பெண்கள் நாம் அனுபவித்த மோசமான நிகழ்வை எதிர்கொண்டு இருப்பீர்கள் எனப் பதிவிட்டார். மேலும் ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவைக்குப் புகார் அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிராப்தி டிவிட்டரில் பதிவிட்டார்.
ஸ்விக்கி நடவடிக்கை
இவரது பதிவு தற்போது நாடு முழுவதும் வைரலாகியுள்ள நிலையில் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த ஸ்விக்கி நிர்வாகத்தின் எஸ்கலேஷன் டீம் மற்றும் சிஇஓ அலுவலகம் வரையில் பிராப்தி-ஐ தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் கணக்கு
பிராப்தி தற்போது தனது டிவிட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளார், ஆனால் டிவிட்டர் தளத்தில் பிராப்தி டிவீட்டுக்குப் பதில் அளித்துள்ளோரின் பதிவுகள் உள்ளது.
மக்கள்
இதில் பலர் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளதையும், ஆன்லைன் டெலிவரி சேவை குறித்தும் பலர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தையும் தாண்டி பலர் கவால் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.
உங்களுக்கு ஏதேனும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா..? கமெண்ட் பண்ணுங்க…
Swiggy Delivery person send ‘MISS YOU LOT’ texts to woman; Twitter post trending, swiggy facing backlash
Swiggy Delivery person sends ‘MISS YOU LOT’ texts to woman; Twitter post trending, swiggy facing backlash ‘மிஸ் யூ’, ‘நைஸ் யுவர் பியூட்டி’.. ஸ்விக்கி டெலிவரி ஊழியர் டார்சர்.. கடுப்பாகி புகார் கொடுக்கப் பெண்..!