பீஜிங்:உலக யோகா தினத்தை முன்னிட்டு, சீனாவில் நடந்த யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். உலக யோகா தினம் வரும் 21ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் தயாராகி வருகின்றன.நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில், நேற்று யோகா பயிற்சி முகாமை இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், துணை துாதர் அக்யுனோ விமல் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வரும் நேரத்தில், சீனாவில் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சீனர்கள் யோகா பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில், யுனான் மின்சூ பல்கலை யோகா கல்லுாரி துவக்கியுள்ளது.
பீஜிங்:உலக யோகா தினத்தை முன்னிட்டு, சீனாவில் நடந்த யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.உலக யோகா தினம் வரும் 21ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் தயாராகி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.