புதுடில்லி: பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இவர் டில்லி வந்து பிரதமர் மோடியையும் சந்தித்தார்.
அன்புமணியை டில்லிக்கு வரச் சொன்னது பிரதமர் அலுவலகம்தான் என சொல்லப்படுகிறது. அன்புமணியை மோடி சந்திக்க விரும்பியதால் இந்த அழைப்பு என்கின்றனர்.பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, தமிழக அரசியல் நிலை குறித்தும் அன்புமணியோடு பேசியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை பா.ம.க., ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம் பிரதமர்.இதைத் தவிர வேறு சில விஷயங்களும் பேசியதாக சொல்லப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., தொடர வேண்டும் என கூறியதுடன், சில வாக்குறுதிகளையும் அன்புமணிக்கு பிரதமர் அளித்துள்ளார். என்ன வாக்குறுதி என்பது பரம ரகசியமாக உள்ளது.
புதுடில்லி: பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இவர் டில்லி வந்து பிரதமர் மோடியையும் சந்தித்தார்.nsimg3056916nsimg
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.