மாத்தளை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வீடுகளில் திருடிய சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தின் உகுவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமை
குறித்த நபருடன் இன்னும் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து வீடொன்றினுள் நுழைந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
திருட்டுப் போன தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், மின்விசிறி போன்ற பொருட்கள் சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதன் காரணமாக மொட்டுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.