இன்றைய காலகட்டத்திலும் கூட சமாதி என்றாலே அஞ்சி பயப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் ஒரு கிராமத்தில் வீட்டின் முன்பு சமாதி கட்டி வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
100 வீடுகளில் சமாதிகள்
ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் எமிகனூர் மண்டலத்தில் அய்யகொண்டா என்றி கிராமம் இருக்கிறது.
இந்த கிராமத்தில் சுமார் 100 வீடுகளின் முன்பு சமாதிகள் இருக்கின்றனர், அதாவது மரணம் அடைந்தவர்களை வீட்டின் முன்பே அடக்கம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தினந்தோறும் தங்களது வீடுகளில் சமைக்கும் உணவுகளை முன்னோர்களின் சமாதியில் வைத்து வணங்கிவிட்டே அவர்கள் சாப்பிடுகின்றனர்.
இந்த வழக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம், இதுமட்டுமா கோவிலுக்கு நைவேத்தியம் படைக்கும் போது முன்னோர்களின் சமாதிகளுக்கும் நைவேத்தியம் படைப்பார்களாம்.
முன்னோர்களுக்கு மரியாதை
குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றாலும் முதல் மரியாதை சமாதிக்கு தான், திருமணம் என்றால் புத்தாடைகளை சமாதியில் வைத்து பூஜை செய்து விட்டே மற்ற சடங்குகள் நடைபெறுமாம்.
நமக்காக பாடுபட்ட முன்னோர்களை அடுத்து வரும் தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறதாம்.
கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் குறைந்தபட்சம் 4-க்கும் மேற்பட்ட சமாதிகள் என 400 சமாதிகள் உள்ளன.
தொடரும் அச்சம்
அந்த கிராமத்தில் சடங்குகள் சகஜம் என்றாலும் மற்ற கிராம மக்கள் ஒருவித பயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.
கிராமத்தில் சிறுவர்களோ சமாதியின் அருகே விளையாடுவது என தொடர்ந்தாலும் மற்ற கிராமத்தினர் உச்சி வெயில் நேரத்தில், இரவு நேரங்களில் அந்த ஊர் வழியே செல்ல தயங்குவது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!