அமெரிக்காவில் வீட்டு கதவில் பாம்பு இருந்தது தெரியாமல் கதவை திறந்த பெண்ணை பாம்பு தீண்டிய நிலையில் அவர் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களுக்கு எச்சரிக்கை தகவலாக பகிர்ந்துள்ளார்.
Princeton நகரை சேர்ந்தவர் கென்லி தாமஸ். இவர் தனது வீட்டின் கதவை திறந்தபடி வெளியே வந்தார்.
அப்போது கதவில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த நிலையில் அதை அவர் கவனிப்பதற்குள் முகத்தில் கடித்துவிட்டது.
இதையடுத்து வலியின் உச்சத்தில் சத்தமாக கத்தினார் கென்லி. அவர் கண்களை தீண்டிய 3 அடி பாம்பு பின்னர் ஓடிவிட்டது.
தன்னை கடித்தது விஷம் கொண்ட பாம்பா அல்லது விஷம் இல்லாத பாம்பா என தெரியாமல் பீதியில் இருந்த கென்லி மருத்துவமனைக்கு தனது தாயார் ஜோவுடன் விரைந்தார்.
பின்னர் தான் கென்லியை தீண்டியது விஷமில்லாத அதே சமயத்தில் பெரும் வலியை தரக்கூடிய சிக்கன் பாம்பு என தெரியவந்தது.
தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இந்நிலையில் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் தகவலை கென்லி வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,வெயிலால் பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி வருகின்றன. நிழலைத் தேடி அல்லது ஓய்வெடுக்க குளிர்ச்சியான இடத்தைத் தேடி.
அப்படி தான் என் வீட்டு கதவில் பாம்பு வந்தது. நான் கதவை திறந்த போது பாம்பை பார்ப்பதற்கு முன்னரே அது என்னை கடித்தது.
எங்கள் வீடு ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது.
தற்போது கதவில் உள்ள தொங்கும் கருவிகளை அகற்றிவிட்டோம், ஏனெனில் அதில் தான் பாம்பு இருந்தது.
நானும் என் குடும்பத்தாரும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என கூறியுள்ளார்.