ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் பணிநீக்கம் செய்திகள் தான், இதனால் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூடப் பயத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இருக்கும் பல நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், எட்டெக் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், வர்த்தகத்தை இழப்புக் காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதன் வாயிலாக அன்அகாடமி நிறுவனம் 2வது முறையாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தி தெரியாதா? தரமான பதிலடி கொடுத்த தமிழச்சி..! ஐடி நிறுவனத்திலும் இதுதான் நிலைமை..!
அன்அகாடமி நிறுவனம்
எட்டெக் நிறுவனமான அன்அகாடமி நிறுவனம், இந்த ஆண்டு ஏப்ரலில் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாக அறிவித்த நிலையில், இந்நிறுவனத்தில் மீண்டும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
PrepLadder பிரிவு
சண்டிகரை தளமாகக் கொண்ட PrepLadder, ஒரு முன்னணி முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வுத் தயாரிப்புத் தளமாகும், இந்நிறுவனத்தை அன்அகாடமி 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
2.6 சதவீத ஊழியர்கள்
தற்போதைய பணிநீக்கம் என்பது அன்அகாடமி நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 2.6 சதவீதமாகும். மேலும் பெரும்பாலான ஊழியர்களைச் செயல்திறன் மேம்பாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
சேவை
2016 ஆம் ஆண்டில் தீபன்சு கோயல், விட்டூல் கோயல் மற்றும் சாஹில் கோயல் ஆகியோரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் PrepLadder. இந்நிறுவனம் மாணவர்களை மருத்துவத் தேர்வுகளை எதிர்கொள்ளத் தயார் படுத்துகிறது. இதோடு NEET PG, AIIMS PG, NEET SS மற்றும் FMGE போன்ற முக்கியமான போட்டி தேர்வுகளுக்கான கல்விச் சேவைகள் மற்றும் தேர்வுக்குத் தயாராகப் பயிற்சி சேவைகளை வழங்குகிறது.
600 ஊழியர்கள்
ஏப்ரல் மாதம் அன்அகாடமி நிறுவனம் கிட்டத்தட்ட 600 ஊழியர்களையும், ஒப்பந்தத் ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது அன்அகாடமி குழு நிறுவனத்தில் இருக்கும் மொத்த 6,000 பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
Edtech பிரிவு
கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் கல்வி சேவைகளின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் Edtech பிரிவு நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
அடுத்தடுத்து பணிநீக்கம்.. அரண்டு போய் நிற்கும் ஊழியர்கள்..!
Unacademy layoff 2nd time; 150 employees fires from its PrepLadder team
Unacademy layoff 2nd time; 150 employees fires from its PrepLadder team 2வது முறையாகப் பணிநீக்கம்.. Unacademy ஊழியர்கள் கண்ணீர்..!