ஒருவர், தான் செய்யும் வேலையை விட முடிவு செய்த பின்பும் ரெசிக்னேஷன் லெட்டர் கூட முழுமையாக டைப் அடிக்க விருப்பம் இல்லாமல் வெறும் 3 வார்த்தையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தப் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டும் அல்லாமல் இந்த அளவிற்கு மோசமான சூழ்நிலையில் உருவாகும் அளவிற்கு என்ன நடந்ததிருக்கும் என விவாதங்கள் அனல் பறக்கிறது.
ஒரு சதுரடி விலை 73,200 ரூபாய்.. அப்படியே தலைசுத்திடுச்சு.. எந்த ஊரில் தெரியுமா..?
வேலை
தினமும் புதிய புதிய விஷயங்களைப் பார்க்கப்போகிறோம், கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற சூழ்நிலை இருந்தால் யாருக்கு தான் வேலைக்குச் செல்ல பிடிக்காது, ஆனால் ஓரே விஷயத்தைச் செய்கிறோம், சுவாரஸ்யமான பணிகளைச் செய்யவில்லை எனில் யாருக்கும் வேலைக்குச் செல்ல பிடிக்காதுதான். இப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த வேலையைச் செய்திருக்கக் கூடும்.
பை பை சார்
டிவிட்டரில் Maphanga Mbuso என்பவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் ஒருவர் வெறும் 3 வார்த்தையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதைக் காட்டியுள்ளார். இந்தப் புகைப்படத்தில் பை பை சார் என்று கூறிவிட்டு தனது வேலை ராஜினாமா செய்துள்ளதை சிம்பிள் என்ற கேப்ஷன் உடன் Maphanga Mbuso பதிவிட்டு உள்ளார்.
வைரல்
இந்தப் புகைப்படம் இதுவரையில் 2,14,200 பேர் லைக் செய்துள்ளது மட்டும் அல்லாமல் 53,100 பேர் ரீடிவீட் செய்துள்ளனர், Maphanga Mbuso வெளிநாட்டவர் என்றாலும் இந்திய டிவிட்டர்வாசிகள் இதை வைரலாக்கியுள்ளனர். இந்த டிவீட்டை பார்த்து பலர் தங்கள் கண்ட மற்றும் பெற்ற அனுபவத்தைத் தெரிவித்துள்ளனர். இது அதைவிடவும் வைராலாகி வருகிறது.
ஐ எம் லீவிங்
ஷாமித் என்பவர் தனது ஊழியர் அந்த மாதத்திற்கான சம்பளத்தை வாங்கிய அடுத்த நாள் இமெயிலில் கூட இல்லாமல் வாட்ஸ்அப்-ல் குட்மார்னிங் சார். ஐ எம் லீவிங் எனக் கூறி பணியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இப்படிப் பலர் தாங்கள் எதிர்கொண்ட விஷயத்தைப் பகிர்ந்துள்ளனர், நீங்களும் உங்கள் அனுபவத்தைக் கமெண்ட் பண்ணுங்க, யாருடையது பெஸ்ட்-ன்னு பார்ப்போம்.
bye bye sir resignation letter trending across countries; Indian employees may take seriously
bye bye sir resignation letter trending across countries; Indian employees may take seriously 3 வாரத்தையில் ரெசிக்னேஷன் செய்த நபர்.. உலகம் முழுவதும் பேமஸ் ஆகியுள்ளார்..!