லண்டனின் கேட்விக் விமான நிலையம் கோடையில் 4,000 விமானங்களை ரத்து செய்ததை அடுத்து ஸ்பெயின் மற்றும் போர்த்துகலுக்கு செல்லும் விமானங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
கேட்விக் விமான நிலையத்தின் இந்த நடவடிக்கையால் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் கழிக்க திட்டமிட்டுள்ள சுமார் 800,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் நாள் ஒன்றிற்கு 825 விமான சேவைகள் ரத்து செய்யப்படும் எனவும், ஆகஸ்டு மாதத்தில் இந்த எண்ணிக்கை 850 என அதிகரிக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நாள் ஒன்றிற்கு 900 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேட்விக் விமான நிலையத்தின் தற்போதைய நடவடிக்கையால் இங்கிலாந்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையத்தில் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், கேட்விக் விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆய்வுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் ஸ்பெயின் நாட்டுக்கான விமான சேவைகளே ரத்தாகும் என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை ஏமாற்றமடையச் செய்யும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார் நிபுணர் ஒருவர்.
கோடை விடுமுறை நெருங்கியுள்ள நிலையில் லண்டன் விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்பில் முடிவுக்கு வராதவரையில், வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும், தேவையற்ற தாமதம் ஏற்படும் மட்டுமின்றி விமான சேவைகள் ரத்தாகும் சூழலும் ஏற்படும் என விமான நிலைய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அரையாண்டு பள்ளி விடுமுறை மற்றும் நான்கு நாள் வார விடுமுறை காரணமாக தேவை அதிகரிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக விமானப் பயணிகள் இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, EasyJet இந்த மாதம் 600 விமானங்களை ரத்து செய்துள்ளது, அதே நேரத்தில் TUI ஜூன் மாதத்தில் 180 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,
இது ஒரு நாளைக்கு ஆறு விமானங்கள் வரையில் பாதிப்புக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் குறுகிய அறிவிப்பு ரத்துகளைத் தடுக்க ஆயிரக்கணக்கான விமானங்களை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது.