Internet Explorer: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்காக கல்லறை… பொறிக்கப்பட்ட வாசகத்தால் ஷாக் ஆன மைக்ரோசாப்ட்!

Internet Explorer gravestone: தென் கொரியாவைச் சேர்ந்த மென்பொறியாளரான ஜுங் கி யோங் செய்த காரியம் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜூன் 17 அன்று நிறுவனம் தனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சேவையை நிறுத்தியது.

தொடர்ந்து குரோமியம் அடிப்படையில் உள்ள எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்த பயனர்களை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, 27 ஆண்டுகள் பயணித்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் நிறைவு நாளை சமூக வலைத்தளங்களில் மக்கள் வருத்ததுடன் பதிவிட்டு வந்தனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு கல்லறை

ஆனால், தென் கொரிய பொறியாளரோ அனைவரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு காரியத்தை செய்துள்ளார். ஆம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக ஒரு கல்லறையை சொந்த செலவில் கட்டியுள்ளார்.

Nothing Phone 1: வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு வரும் 100 நத்திங் போன் 1 லிமிட்டட் எடிஷன் போன்கள்!

இதற்காக அவர் 330 டாலர்களை வரை செலவு செய்ததாகக் கூறியுள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.25,000 ஆக உள்ளது. இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதில் அவர் பொறித்திருந்த வாசகங்கள் தான் ஷாட் டிரெண்டாகி உள்ளது.

அதில் அவர், “இவர் பிற பிரவுசர்களை பதிவிறக்கம் செய்ய உதவும் நல்ல கருவி” என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். அதாவது, காலங்கள் செல்லச்செல்ல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணம் குறையத் தொடங்கின.

Social Media: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றை பாதுகாப்பாக பயன்படுத்திட… இந்த 8 மந்திரங்கள் உதவலாம்!

இப்படி இருந்த காலகட்டத்தில், பிற பிரவுசர்களை டவுன்லோட் செய்ய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நன்றாக உதவியது என்று நகையாடி உள்ளார். இவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பெரிய வரலாறை கொண்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

இணையத்தில் வேலை செய்ய மக்கள் சிரமப்பட்ட காலமது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் வருகையுடன், மக்கள் இணையதளங்களில் வேலை செய்வது எளிதாக்கப்பட்டது.

INBook X1 Slim: இப்புடி டஃப் கொடுக்கலாமா இன்பினிக்ஸ்; i7 லேப்டாப் விலை இவ்வளவு தானா!

மைக்ரோசாப்ட் நிறுவனதால் ஆகஸ்ட் 16, 1995 ஆம் ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவைத் தொடங்கப்பட்டது. இந்த வகையான முதல் இணைய உலாவி இதுவாகும். இதனால் மக்களுக்கு பெரிய வேலைகள் சுலபமானது.

Galaxy F13: சாம்சங்கின் பட்ஜெட் கிங் கேலக்ஸி எஃப்13 விரைவில்… இவ்ளோ பெரிய பேட்டரியா!

அரசு துறை முதல் வங்கிகளில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. இடையிடையே சில பிரவுசர்கள் வந்தாலும், இது பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டது. மக்கள் இந்த பிரவுசரை பெரிதும் நம்பினர் என்பது மறுக்க முடியாதது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.