Tamil News Live Update: சென்னை, செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 94.24  காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா அபார வெற்றி!

இந்தியா- தென்னாப்பிரிக்கா, 4வது டி-20 கிரிக்கெட் போட்டியில், 82 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளனர்.

Tamil News Latest Updates

சென்னை, செங்கல்பட்டில் கொரோனா அதிகரிப்பு!

சென்னை, செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னையில் 1,311 பேரும், செங்கல்பட்டில் 552 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 2,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகார், உ.பி. ரயில் சேவைகள் ரத்து!

அக்னிபத் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், தென்னக ரயில் கோட்டத்தில் இருந்து பீகார், கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை ரத்து செய்து  தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
09:26 (IST) 18 Jun 2022
அக்னிபாத் திட்டம்.. தேர்வாகும் வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு!

அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

09:09 (IST) 18 Jun 2022
அக்னிபாத் போராட்டம்.. பல ரயில்கள் ரத்து!

அக்னிபாத் போராட்டத்தின் காரணமாக பின்வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த ரயில்கள் கீழே உள்ள விவரங்களின்படி இயக்கப்படும்!

08:26 (IST) 18 Jun 2022
மோடி தாய்க்கு 100வது பிறந்தநாள்!

பிரதமர் மோடி தனது தாய் ஹீராபென் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

08:25 (IST) 18 Jun 2022
தெலங்கானா அக்னிபத் எதிர்ப்பு போராட்டம்!

தெலங்கானா அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு, ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.