Today Rasi Palan 18th June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Today Rasi Palan 18th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 18ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நீங்கள் விரைவில் செயல்படுத்துவதற்கு தயாராகலாம். உங்கள் நட்சத்திரங்கள் கடந்த சில வாரங்களைவிட இந்த வாரம் வெளிப்படையாக மிகவும் சாதகமான நிலையை காட்டுகின்றன. மேலும், நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் இளமையாகவும், தன்னிச்சையாகவும், ஒரு கணத்தில் செயல்படத் தயாராக இருக்க வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் சமீபத்தில் உங்கள் உதவிக்கு வந்துள்ளனர். நீங்கள் மிகவும் சாதகமான எதிர்காலத்திற்காக திட்டமிட வேண்டும். இன்றைய நட்சத்திரங்கள் வீட்டு விவகாரங்கள் குறித்து தெரிவிக்கின்றன. எனவே, குடும்ப உறவுகள் முதலில் இருக்க வேண்டும். உங்களுடன் வசிப்பவர்கள் பொதுவில் கவனம் பெறுவார்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
குறுகிய பயணங்களுக்கு வாய்ப்பு உள்ளன. எனவே, நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் எந்த அழைப்பையும் ஏற்கலாம். அந்த பயணம் வணிகத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாராவது தொடர்பு கொள்வதற்காக நீங்கள் காத்திருந்தால், இனி காத்திருக்க வேண்டாம். முன்முயற்சி எடுத்து முதல் நகர்வை மேற்கொள்ளுங்கள். உங்களை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
நீங்கள் வழக்கத்தைவிட இன்னும் கொஞ்சம் ரகசியமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணரலாம். உங்கள் காதல் நட்சத்திரங்கள் உச்சத்தில் உள்ளன. சிறிய மாற்றத்தைக்கூட நீங்கள் மிகவும் நுண்ணுணர்வுடன் காணலாம். இருப்பினும், உங்கள் நுண்ணுணர்வுகளுடன் தொடர்ந்து இருப்பது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
இது உணர்ச்சிகரமான ஏற்ற தாழ்வுகள் மிக்க நேரமாக இருக்கும். ஏற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இருப்பினும், உறுதியான செயல் மட்டுமே தடைகளை மாற்றும் அல்லது வீட்டில் ஆழமாக வேரூன்றிய எரிச்சலைத் தீர்க்கும். இருப்பினும், முதலில், துணைவர் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
கனவு காணுங்கள். உங்கள் கற்பனையானது உச்சத்தில் இருக்க வேண்டும். அதாவது கூடுதல் கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து நேர்மறையான கோணங்களையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும். நெறிமுறை சிக்கல்களில் கவனம் செலுத்துங்கள், மேலும் தார்மீக குணங்களை உயர்த்திக்கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
சில வகையான நிதி நெருக்கடிகள் உருவாகிறது. எனவே, நீங்கள் மோசமான உணர்வைத் தவிர்க்க வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீங்களே சேமிக்க விரும்பினால், சில சிக்கல்களைக் களைவது அவசியம். நீங்கள் குடும்ப விஷயத்தில் அல்லது வீட்டுக்கு பெரிய பொருட்களை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், ஒரே யோசனையைப் பின்பற்றுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கவனியுங்கள். ஏதாவது குழப்பங்களுக்கு நீங்கள் எந்த அளவிற்கு பொறுப்பாவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், நீங்கள் ஏதேனும் செய்யாமல் விட்டுவிட்ட விஷயங்களாக இருக்கலாம். அதையொட்டி, வேறொருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்திருக்கலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
உங்கள் கற்பனையானது உங்களை எந்த பலனும் இல்லாமல் பழைய பிரச்னைகளை எதிர்கொள்ள வழிவகுக்கலாம். மனக்கசப்பு, பொறாமை, கோபம் மற்றும் பழிவாங்கும் ஆசை போன்ற உணர்வுகள் மறைந்திருக்கும். இருப்பினும், முதலில் நீங்கள் நிலைமையை நியாயமான முறையில் சரியான மதிப்பீட்டை செய்ய வேண்டும். உண்மைகள் பேசட்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் நட்சத்திரங்கள் அரிதாக அதிக ஆர்வத்துடன் காணப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆர்வமாக இல்லை! இத்தகைய உணர்வுகள் நிச்சயமாக உங்கள் காதல் விவகாரங்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், உங்கள் வாழ்க்கையின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும். ஒரு தைரியமான மற்றும் வண்ணமயமான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
நீங்கள் நினைப்பதை விட மிகவும் வலிமையானவர். வெளிப்படையாக பேரழிவு தரும் முன்னேற்றங்கள் கூட உங்களுக்கு சாதகமாக மாறும். அவர்களால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளால் நிரம்பியுள்ள துணைவருக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், அதை அதிகாரத்துடன் செய்யாதீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
தார்மீக ரீதியான கேள்விகளைப் பற்றி நீங்கள் மிகவும் வருத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், நீங்கள் முடிவுகளுக்குச் செல்லுங்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தவறாகப் புரிந்துண்டு பொறுப்பாவீர்கள். உங்கள் தரப்பைச் சொல்லுங்கள், அதே போல, மற்றவர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்பவராக இருங்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்துகிறீர்கள் என்று துணைவருக்கு தெரிந்தால், அவர்கள் அன்புடன் பதிலளிப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“