தென்தமிழகத்தின் முதல் அருங் காட்சியகமும், முதல் புத்தகக் கடையும் உருவான இடம் மதுரை புதுமண்டபம்தான் என்பதற் கான கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் கி.பி.1800-களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ‘காவல் கோட்டம்’ நாவலில் எழுதி உள்ளேன். பழங் காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகள் புத்தகங்களாக மாறி, அந்த புத்தகங்களை விற்க ‘புத்தகக் கடைகள்’ முதன்முதலில் உருவான இடம் மதுரை புதுமண்டபம்.
கிபி.1800-களின் இறுதி பத் தாண்டில் ராமநாதபுரத்திலிருந்து மதுரை வந்த பாண்டித்துரைதேவர் கம்பராமாயணம், திருக்குறள் புத்தகம் படிப்பதற்காக நண்பர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இறுதியில் புதுமண்டபத்திலுள்ள கடைகளிலிருந்து 2 புத்தகத்தையும் வாங்கி உள்ளார். அதன் பின்னரே, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கும் எண்ணம் அவருக்கு உருவாகியுள்ளது.
இவ்வரலாற்றின் தொடர்ச்சி யாக 1942-ம் ஆண்டு புதுமண்டபத் தின் மையப்பகுதியில் அருங்காட்சி யகத்துடன் அமைந்த நூலகம் ஒன்று, அன்றைய சென்னை மாகாண கவர்னரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் கல்வெட்டு, புது மண்டபத்தின் மையப்பகுதி நுழைவாயில் கதவோரம் இருந்ததை 25 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்துள்ளேன். ஆனால், இடையில் அக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட தூணைக் காண வில்லை. புது மண்டபத்துக்கு போகும் போதெல்லாம் அந்த தூணைத் தேடுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இக்கல்வெட்டு தொடர்பாக பேசியுள்ளேன்.
தற்போது புதுமண்டபத்திலி ருக்கும் கடைகள் முழுவதும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப் பட்டுள்ளதால் 100 ஆண்டுக்குப் பிறகு புதுமண்டபம் மீண்டும் ‘பழைய மண்டபமாக’ காட்சி அளிக்கிறது. புதுமண்டபத்தில் நடக்கும் வசந்த விழாவுக்காக சுத்தம் செய்தபோது ஒரு ஓரத்தில் கல்தூண் கிடந்துள்ளது. அதனைப் புரட்டிப் பார்த்தபோது சென்னை மாகாண கவர்னரால் அருங்காட்சியகமும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு எனத் தெரிந்தது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.