ஆப்கன் வெங்காயம் ஏற்றுமதி நிறுத்தம்| Dinamalar

காபூல்-தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில் இந்தாண்டு வறட்சியால் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது.

இதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஆப்கனில், கோடை காலத்தில் வழக்கமாக 1 கிலோ வெங்காயம், 4 ரூபாய் வரை விற்கப்படும். இந்தாண்டு வெங்காய உற்பத்தி குறைந்ததால், 1 கிலோ, 25 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, உள்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் மற்றும் கால்நடை கூட்டமைப்பு உறுப்பினர் மிர்வய்ஸ் ஹஜிசாதா தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா, பாக்., ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு, ஆப்கன் வெங்காயம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.