இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த டாப் 10 துறைகள்.. எவ்வளவு முதலீடு தெரியுமா?

இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் இருந்தாலும், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனையானது மிக மோசமான அளவில் இருந்து வரும் நிலையில் கூட, பல நாடுகளும் மிக மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இருப்பினும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட, இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் சிறந்த 10 வணிக துறையானது எது? எந்த துறையில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளது? அதன் மதிப்பு எவ்வளவு? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

உற்பத்தி துறை

இந்தியாவில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக இருப்பது உற்பத்தி துறை தான். கடந்த நிதியாண்டில் 16,300 மில்லியன் டாலர்கள் நிதியினை பெற்றுள்ளது. இந்தியாவில் இன்றும் அதிகளவிலான உற்பத்தி, வேலை வாய்ப்பு, வருவாய் என பெரியளவில் தன்னகத்தே கொண்டு இருப்பது உற்பத்தி துறை தான். இந்திய அரசு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பி எல் ஐ திட்டம் மூலம் மேடு இன் இந்தியாவினை ஊக்கப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தான் அதிகளவில் முதலீட்டினை பெற்ற முதல் துறையாக உற்பத்தி துறை உள்ளது.

சேவைத் துறை

சேவைத் துறை

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறை சேவைத் துறையாகும். இந்த துறையில் கடந்த ஆண்டில் 9000 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தியா சேவைத் துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இது எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்யூனிகேஷன் சர்வீசஸ்
 

கம்யூனிகேஷன் சர்வீசஸ்

இந்தியாவில் மூன்றாவதாக மிகப்பெரியளவில் தனது சேவையினை செய்து வரும் துறையில் கம்யூனிகேஷன் சேவை உள்ளது. இந்த துறையில் கடந்த ஆண்டில் 6400 மில்லியன் டாலர்கள் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 5ஜி தொழில் நுட்பத்தினை மேம்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதமானது இன்னும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை & மொத்த வியாபாரம்

சில்லறை & மொத்த வியாபாரம்

இந்தியாவின் சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில், கடந்த நிதி ஆண்டில் 5100 மில்லியன் டாலர் எனும் அளவுக்கு FDI பெறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த தேவையானது, நடப்பு ஆண்டில் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆக நடப்பு ஆண்டில் இந்த மதிப்பானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி சேவைகள்

நிதி சேவைகள்

இந்தியாவில் நிதி சார்ந்த சேவைகளானது ஓரளவு வளர்ச்சி காணும் துறைகளாக உள்ளன. இந்த துறையில் கடந்த ஆண்டில் 4700 மில்லியன் டாலர்கள் நிதி பெறப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி, ஆராய்ச்சி & டெவலப்மெண்ட்

கல்வி, ஆராய்ச்சி & டெவலப்மெண்ட்

இந்தியாவினை பொறுத்தவரையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு என்பது 3600 மில்லியன் டாலர் என்ற அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், இனி வரும் காலத்தில் இன்னும் கல்வித் துறையிலும் வளர்ச்சி விகிதம் மேம்படலாம், முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து

போக்குவரத்து

நாட்டின் முக்கிய துறையாக இருக்கும் போக்குவரத்து துறையானது டாப் 10ல் 7வது இடத்தில் உள்ளது. இந்த துறையில் மட்டும் 3300 மில்லியன் டாலர் முதலீடு பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையினை பொறுத்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மக்களின் செலவினமானது குறைந்திருந்தது. ஆக இனி இது அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக FDI முதலீடும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக சேவைகள்

வணிக சேவைகள்

இந்தியாவில் வணிக சேவை என்பது இன்னும் பெரியளவில் வளர்ச்சி காணவில்லை எனலாம். இந்த துறையில் 2500 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. (இந்த தரவனானது ஆர்பிஐ- ஆல் வெளியிடப்பட்ட தோராய மதிப்பாகும்)

மின்சார துறை

மின்சார துறை

இதே 10வது இடத்தில் மின்சாரம் மற்றும் மின் உற்பத்தி துறையானது உள்ளது. இந்த துறையில் 2200 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடானது பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பசுமை எனர்ஜி உற்பத்தி குறித்தான ஆர்வமும், தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த துறையானது நல்ல வளர்ச்சி காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த துறையில் FDI முதலீடு அதிக முதலீடு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 – 22ல் மட்டும் சுமார் 56,300 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படுள்ளதாக ஆர்பிஐ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which top 10 Indian sectors received the most amount of FDI flows?

Which are the top 10 business sectors in India during the last 2021-22 financial year? In which sector has it received the highest foreign direct investment? What is its value?60

Story first published: Sunday, June 19, 2022, 18:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.