இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் தான்.. கச்சா எண்ணெயைத் தொடர்ந்து நிலக்கரியும் தள்ளுபடியில்..எவ்வளவு?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனை காரணமாக உலக நாடுகள் பலவும், ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. ஏற்கனவே கச்சா எண்ணெய்-க்கு சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளரான ஐரோப்பிய நாடுகளும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளன.

எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வழக்கத்தினை விட, கூடுதலாக எண்ணெய் வாங்கி வருகின்றன.

அதுவும் தள்ளுபடி விலையில் வாங்கி வருகின்றன. இது பல நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவினை தடை செய்ய கூறி நிர்பந்திக்க முடியவில்லை.

ஜனவரி 1 முதல் நிலக்கரி பயன்படுத்த கூடாது.. டெல்லிக்கு உத்தரவு..!

தள்ளுபடி விலையில் நிலக்கரியா?

தள்ளுபடி விலையில் நிலக்கரியா?

கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து 30% தள்ளுபடி விலையில் நிலக்கரியை வாங்கிக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தியாவும் ரஷ்யாவும் உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு கூடுதலாக பல வர்த்தகங்களுக்கு பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன.

 அண்டை நாடுகளின் கருத்து?

அண்டை நாடுகளின் கருத்து?

ரஷ்யா – இந்தியா இடையேயான பண பரிவர்த்தனைக்கும் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கு பல நாடுகளும் அதிருப்தியாக இருந்தாலும், முந்தைய வர்த்தகத்தினை விட கூடுதலாக வணிகம் செய்ய வேண்டாம் என அண்டை நாடுகள் கூறியுள்ளன.

6 மடங்கு நிலக்கரியா?
 

6 மடங்கு நிலக்கரியா?

இந்த நிலையில் தான் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து, நிலக்கரியினை தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகின்றது, இது கடந்த மே 27ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி 6 மடங்கு வாங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன.

செலவு அதிகமா?

செலவு அதிகமா?

இது குறித்து நிபுணர்கள், இதுபோன்று இறக்குமதியினை இந்தியா இதுவரை செய்தததில்லை. முன்னதாக சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதாக கூறியுள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் செலவினங்கள் அதிகம் இருந்தாலும், தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளதால் இந்தியா அதிகம் வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.

பல கோடி வர்த்தகம்

பல கோடி வர்த்தகம்

மேலும் இந்த வர்த்தகத்திற்கு கட்டணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கரன்சியாக ரஷ்ய நிறுவனங்கள் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாட்களில் 6 நாட்களில், 2500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. இதே காலகட்டத்தில் எண்ணெய் வர்த்தகமும் 31 மடங்கு அதிகரித்து, 16,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India is reportedly buying coal at a discount following crude oil

It has been reported that it is buying and stockpiling coal from Russia at a 30% discount, following crude oil.

Story first published: Sunday, June 19, 2022, 11:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.