இந்தியா பங்கு சந்தையானது கொரோனா காலத்தில் கூட இந்த அளவுக்கு மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியதா? என்ற பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்திய வாரங்களாக அந்தளவுக்கு மோசமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
கடந்த சில வாரங்களில் மட்டும் பல லட்சம் கோடி சந்தை மதிப்பானது காணமல் போயுள்ளது எனலாம்.
நாட்டின் முன்னணி நிறுவனங்களாக இருந்து வரும் பெரும் நிறுவனங்கள் கூட, கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பினை கொடுத்துள்ளது எனலாம். இந்திய சந்தையில் இதுவரை கண்ட மோசமான சரிவுகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
1992ம் ஆண்டு சரிவு
1992ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவானது இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவுகளில் ஒன்றாக உள்ளது. சொல்லப்போனால் இந்திய பங்கு சந்தை வரலாற்றில் மோசமான சரிவுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் கடந்த 1 வருடத்தில் 50% மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
இது இந்தியாவில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான ஹர்ஷத் மேக்தாவின் ஊழல் அம்பலமானது இந்த ஆண்டில் தான். இந்திய பத்திர சந்தை ஊழலில் சிக்கியவர். ஆரம்ப காலத்தில் பங்கு சந்தையில் பிக் புல்லாக இருந்தவர், இவரின் மோசடிகள் அம்பலமான சமயத்தில் இந்திய சந்தையானது மிக மோசமான சரிவினைக் கண்டது. ஏப்ரல் 28, 1992 அன்றும் 12.77% வீழ்ச்சியினை கண்டன.
2004ம் ஆண்டு சரிவு
2004ம் ஆண்டில் செபி, யுபிஎஸ் அதிகளவிலான செல்லிங் ஆர்டர்களை போட்டதால் பெரியளவில் சரிவு ஏற்பட்டதை செபி கண்டிபிடித்தது. யுபிஎஸ் அந்த சமயத்தில் மிகப்பெரிய அன்னிய முதலீட்டாளராக இருந்தது. அந்த சமயத்தில் திடீரென பி எஸ் இ குறியீடானது 842 புள்ளிகள் சரிவினைக் கண்டது.
2007ம் ஆண்டில் சரிவு
ஏப்ரல் 2, 2007ல் சென்செக்ஸ் திடீரென 617 புள்ளிகள் சரிவினைக் கண்டது. அதன் பிறகு 4 மாதம் கழித்தும் 6145 புள்ளிகள் சரிவினை கண்டது. இதுவும் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான சரிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
2008 சரிவு (கிரேட் ரெசசன்)
2008 கிரேட் ரெசசன் காலம் எனலாம். அந்த காலகட்டத்தில் பி எஸ் இ-யில் 1408 புள்ளிகள் சரிவினைக் கண்டது. இது கறுப்பு திங்கள் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
ஜனவரி 22, 2008ல் சென்செக்ஸ் 875 புள்ளிகள் சரிந்தும், பிப்ரவரி 11, 2008ல் 834 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டது. சீனா பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலையில் என்ற அச்சத்தின் மத்தியில் சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிவினைக் கண்டன.
2015 சீனா பொருளாதாரம் சரிவு
2015ம் ஆண்டில் சீனாவின் யுவான் கரன்சியானது மிக மோசமான அளவு சரிவினைக் கண்ட நிலையில், இது மற்றோரு மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 24, 2015 அன்று சீனா பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிவினைக் கண்டது.
2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கை
கடந்த 2016ல் இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால், பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்டது. இது கறுப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. அப்போது 500 மற்றும் 1000 ரூபய் நோட்டுகளை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
இதற்கிடையில் நவம்பர் 6, 2016ல் சென்செக்ஸ் 1689 புள்ளிகள் அல்லது 6% சரிவினைக் கண்டது.
2019ம் ஆண்டு நிலவரம்
2019-லும் சென்செக்ஸ் நிஃப்டி கடுமையான சரிவினைக் கண்டன. இது அமெரிக்க மத்திய வங்கியானது நீண்டகாலமாக வட்டி குறைப்பு எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்தது எனலாம். இது இது பொருளாதார மந்த நிலை, குறைந்த காலாண்டு வருவாய் என பல காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது பலத்த சரிவினைக் கண்டது. 2019 பட்ஜெட்டுக்கு பிறகு சந்தையில் 13.70 லட்சம் கோடி இழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2020 கொரோனா பெருந்தொற்று
2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய பங்கு சந்தையானது கடந்த மார்ச் 23, 2020ல் பலத்த சரிவினைக் கண்டது. அப்போது சென்செக்ஸ் 13% அல்லது 3944 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது.
நடப்பு ஆண்டு நிலவரம்
நடப்பு ஆண்டிலும் இந்திய சந்தையில் மோசமான ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது. பலத்த சரிவானது ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு சர்வதேச காரணிகள், பொருளாதார மந்த அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது.
Top 8 stock market crashes in india till date
What are the worst declines the Indian stock market has ever seen? In what years did this happen. Let’s see what caused the market to decline.