இந்திய குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.. யார் எல்லாம் தகுதியானவர்கள்?

இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை எவ்வாறு தேர்தெடுக்கின்றனர்? இந்த தேர்தல் எப்போது நடக்கும்? இதில் யாரெல்லாம் வாக்களிப்பார்கள்? இதில் ஏன் மக்கள் நேரிடையாக தேர்தெடுப்பதில்லை? உள்ளிட்ட சில முக்கியமானவற்றை பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 21 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலம் முடிவு

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24வுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் முதல் குடிமகனை மக்கள் ஏன் நேரடியாக தேர்தெடுப்பதில்லை என்று என்றேனும் யோசித்துள்ளீர்களா? உண்மை தான் மக்கள் நேரடியாக தேர்தெடுப்பதில்லை தான். ஆனால் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தான் குடியரசு தலைவரை தேர்தெடுக்கின்றனர்.

யாரெல்லாம் தேர்தெடுக்கலாம்?

யாரெல்லாம் தேர்தெடுக்கலாம்?

பொதுவாக இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் மாநில சட்டபேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற மக்களை உறுப்பினர்கள், மாநிலங்களை உறுப்பினர்கள் வாக்குகளிக்க தகுதியானவர்களாவர். இவர்களுடன் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசு தலைவர் தேர்தெடுக்கும் உறுப்பினர்களாவர்.

எத்தனை பேர்?
 

எத்தனை பேர்?

எம்பி – க்கள் – (மக்களை) – 543 பேர்

எம்பி – க்கள் – ( மாநிலங்களவை) – 233 பேர்

எம் எல் ஏ-க்கள் – 4033 பேர்

ஆக ஒட்டுமொத்தம் எம் எல் ஏ-க்கள் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை 4809 பேராகும்.

மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையானது 10,86,431 ஆகும்.

எம் எல் ஏ-க்களின் வாக்கு பதிவு?

எம் எல் ஏ-க்களின் வாக்கு பதிவு?

தேர்தலில் எம் எல் ஏ-க்களின் வாக்குககுக்கான மதிப்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, அந்த மாநில எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். அதில் வரும் விடையினை 1000ல் வகுத்தால் வரும் எண் தான், ஒரு எம் எல் ஏவின் வாக்கு மதிப்பாக கணக்கிடப்படுகின்றது.

மாநிலத்தின் மக்கள் தொகை/ மாநில எம் எல் ஏ-க்களின் எண்ணிக்கை*1000

இது மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.

எம்பி -க்களின் வாக்கு மதிப்பு?

எம்பி -க்களின் வாக்கு மதிப்பு?

எம்-பிக்களின் வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறாது.

எம்பி-க்களின் வாக்கு மதிப்பு = ஒட்டுமொத்த எம் எல் ஏ-க்களின் எண்ணிக்கை/ஒட்டுமொத்த எம்பி-க்களின் எண்ணிக்கை

எம்பி-க்களின் வாக்கு மதிப்பு * மொத்த எம்பிக்கள் வாக்குமதிப்பு = ஒட்டுமொத்த எம்பி-க்களின் வாக்கு மதிப்பு

மொத்த வாக்கு மதிப்பு

மொத்த வாக்கு மதிப்பு

மொத்த வாக்கு மதிப்பு = எம் எல் ஏ-க்களின் வாக்கு மதிப்பு + எம்பி-க்களின் வாக்கு மதிப்பு

யார் தகுதியானவர்?

யார் தகுதியானவர்?

குடியரசு தேர்தலில் நிற்க ஒரு இந்திய குடி மகனாக இருக்க வேண்டும். இவர்களின் வயது கட்டாயம் 35 வயது முடிந்திருக்க வேண்டும். எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த நிறுவனங்களிலும் பணிபுரியக் கூடாது. மக்களவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பதற்குரிய தகுதியுடையவாராக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா

English summary

How is the president of india elected: who is eligible for president of india?

How is the president of india elected: who is eligible for president of india?/இந்திய குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.. யார் எல்லாம் தகுதியானவர்கள்?

Story first published: Sunday, June 19, 2022, 22:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.