அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியுள்ள சம்பவம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 23-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கடந்த வாரம் அதிமுக தீர்மான குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்து. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் எனச் சிலர் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் ஒற்றை தலைமை தேவை என்ற ரீதியில் பேசி இருந்தார்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் இல்லங்களுக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் மாறி மாறி சென்றுவருகின்றனர். இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டுக்கு சென்று நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக,
அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார். மேலும் திமுக அரசை எதிர்த்து பேசும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லையென்றும்
கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM