Central minister L Murugan stopped by Airport officials in Kovai: கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை செல்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை விமான நிலையம் வந்தப்போது, நுழைவுச்சீட்டு இல்லை என்று கூறி, விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் எல்.முருகனிடம் நுழைவுச்சீட்டு இல்லாததால் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படியுங்கள்: செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி உதயகுமார் மாறிமாறி ஆலோசனை: அ.தி.மு.க லேட்டஸ்ட் நிகழ்வுகள்
விமானம் புறப்படும் நேரம் மாலை 4.10 மணி என்பதாலும், எல்.முருகன் 3.30 மணிக்கு விமான நிலையம் வருவதாக இருந்ததாலும், அவருடைய பயணச்சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் விமானநிலையத்திற்குள் காத்திருந்தார்.
ஆனால் எல்.முருகன் முன்கூட்டியே வந்தது, பயணச்சீட்டை வைத்திருந்தவருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் அங்கு விரைந்து வந்து, நுழைவுச்சீட்டை காண்பித்தார்.
நுழைவுச்சீட்டு காண்பிக்கப்பட்டதை அடுத்து, எல்.முருகன் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதுபோல் நடந்துள்ள நிலையில், மீண்டும் நடந்ததால், உடன் வந்தவர்களை அமைச்சர் எல்.முருகன் கடிந்துக் கொண்டார். மேலும், இதுபோல் மீண்டும் நடக்க கூடாது என்றும் அவர்களை எச்சரித்தார்.
இந்தச் சம்பவத்தால், கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.