உலகின் மிகப் பெரிய பணக்காரரும், பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet) உடன் ஒருவேளை மதிய உணவருந்துவதற்கு, வருடா வருடம் ஏலம் விடுவது வழக்கம்.
அப்படி ஏலத்தின் மூலம் நடப்பு ஆண்டில் 19 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 148 கோடி ரூபாய்க்கு மேல்) ஏலம் விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஏலத்தின் மூலம் இவ்வளவு விலை கொடுத்து உணவு அருந்த புக் செய்துள்ளவர் யார்? எதற்காக இந்த ஏலம் வருடா வருடம் விடப்படுகிறது.
நாடு முழுக்க வெடிக்கும் போராட்டம்.. ஏன்.. அக்னிபாத் திட்டத்தின் பாசிட்டிவ் & நெகட்டிவ் என்னென்ன?
தொண்டு நிறுவனத்துடன் இணைந்துள்ள வாரன்
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடு அற்றவர்களுக்காக இயங்கி வரும் (Glide) கிளைட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டு தோறும் இந்த ஏலத்தை நடத்தி வருகிறார் வாரன் பஃபெட். இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 21 வருடங்களாக பணியாற்றி வருகிறார் வாரன் பஃபெட்.
எதற்காக இந்த ஏலம்
சான்பிரான்சிஸ்கோவிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மக்களின், வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது மற்றும் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு வீடு, உணவு வழங்குதல், மன நிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சைக்காக பங்களிப்பு செய்தல், அதோடு சுமார் 8,000 மக்கள் வீடு இல்லாமல் தெருக்களில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காகவே இப்படியொரு ஏலத்தினை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
யார் இணைய போகிறார்கள்?
நடப்பு நிதியாண்டிற்கான இந்த ஏலம் நியூயார்க்கினை சேர்ந்த ஸ்மித் & வோலென்ஸ்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுடன், 7 பேர் வரை இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளைட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஏலம் கடந்த ஞாயிற்றுகிழமையன்று 25000 டாலர்கள் என்ற ஆரம்ப விலையுடன் தொடங்கியது. திங்கட்கிழமையன்று இந்த ஏலம் 2 மில்லியன் டாலரைன் தாண்டியது. அதன் பிறகு இறுதியாக 19 மில்லியன் டாலராக அதிகரித்தது.
வரலாற்று உச்சம்
முன்னதாக கிரிப்டோகரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன் 2019ம் ஆண்டு ஏலத்தில் 4.57 மில்லியன் டாலர் செலுத்தி வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2020 மற்றும் 2021ல் பெருந்தொற்று காரணமாக இந்த போட்டிகள் நடபெற்று வருகின்றது. இந்த ஏலத்தில் இந்த ஏலம் இருந்து, 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டத்தில் இருந்து நடப்பு ஆண்டில் தான் அதிகளவில் ஏலமிடப்பட்டுள்ளது.
மொத்தம் எவ்வளவு தெரியுமா?
இந்த வெற்றிகரமான ஏலம் மூலமாக இதுவரையில் 53 மில்லியன் டாலர்களை கிளைட் தொண்டு நிறுவன் திரட்டியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் இந்த மதிய உணவின் மதிப்பு, இந்தாண்டு 19 மில்லியன் டாலரை எட்டியுள்ளது.
Warren buffett’s Last lunch auction fetches record Rs.148 crore
It is customary to bid year after year, perhaps for lunch, with Warren Buffett, known as the father of the world’s richest man and stock market. Over 148 crore rupees have been auctioned in the current year through such auctions.