அதிமுகவை பிளவுபடுத்த அந்நிய சக்திகள் செயல்படுவதாக கூறிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஒருகிணைப்பாளர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயாரக இருக்கிறார் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தைக்கு தாயாரா இருப்பதாக எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். கடந்த 5 நாட்களாகவே இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஓபிஎஸ்-தான் தலைமை ஏற்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக சென்னை, தேனி, ராமநாதபுரம் என்று பல இடங்களில் போஸ்டர் ஒட்டபட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒபிஎஸ் மட்டுமே வெளிப்படையாக பேசி வருகிறார். மேலும் ஒற்றை தலைமை என்பதை வைத்து ஓபிஎஸ்-யை கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓபிஎஸ்-யைவிட ஈபிஎஸ்-க்குத்தான் அதிக ஆதரவாளர்கள் கட்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , அந்திய சகதிகளின் தூண்டுதலின் பெயரில்தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது என்றும் அதிமுக பிளவுபடுத்த அந்நிய சகதிகள் செயல்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் கூறுகிறார். நன்றி நானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஏன் இபிஎஸ் கூறவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.