கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமை தெரிய வரும்: ராகுலுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும் என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தனது பிறந்த நாளை அமைதியாக கொண்டாடுமாறு காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிற்ந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், “ அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!..

கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.