கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கில் நாளை 20 போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளது சிபிசிஐடி. ஏற்கெனவே 30 போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரி சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர் காவல் நிலையம், கொடுங்கையூர் எவரெடி போலீஸ் பூத், தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் நேற்று ஒரே நாளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகரன் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எந்த வழக்கிற்காக அழைத்துவரப்பட்டார்? வழக்கு தொடர்பாக காவல் நிலைய பதிவேடு மற்றும் ஆவணங்களில் முறையாக ராஜசேகர் கைது தொடர்பாக பதிவு செய்யப்பட்டதா? சம்பவத்தன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு 30 போலீஸாரிடமும் பதில்கள் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
– சுப்பிரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM