கோவை சிறுமியின் மண் பாதுகாப்பு வீடியோ இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ் சாதனை| Dinamalar

உலகம் முழுதும் மண்ணை பாதுகாக்க வலியுறுத்தி, கோவை ஈஷா அறக்கட்டறை நிறுவனர் சத்குரு, ‘மண் காப்போம்’ இயக்கத்தை துவங்கி, 100 நாள் ‘பைக்’ பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கோவை, வடவள்ளியை சேர்ந்த வினோத்குமார் – தேஜஸ்வி தம்பதியின் 2 வயது மகள் கோபிகா, மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்கள் மூலம், ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பெங்களூரு நியூ திப்பசந்திராவில், 14 ஆண்டுகளாக வசிக்கும் வினோத்குமார், என்.ஏ.எல்., பொது நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். மகளுக்கு 1 வயதிலிருந்தே தேசப்பற்றை ஊட்டி வளர்த்துள்ளனர். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும், ஆர்வத்துடன் சொல்லிக் கொடுத்துள்ளார்.

அதற்கேற்றவாறு கோபிகாவும் கற்று, மண் பாதுகாப்பு தொடர்பாக, சத்குரு விழிப்புணர்வு இயக்கம் துவங்கிய மார்ச் 21ல், வீடியோ பதிவை துவக்கியுள்ளனர். நேற்றுவரை மொத்தம், 94 வீடியோக்களை, DEVIGO என்ற, ‘யு டியூப்’ சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்கு, பார்வையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, 54 வீடியோக்கள் செய்தபோதே, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை வேத்திலும் நடித்துள்ளார். 13 மொழிகளில் பேசி, நடித்து கலக்கியுள்ளார். நடனம், ஆடியும், பாடல் பாடியும், சமஸ்கிருத சுலோகங்கள், கவிதை படித்தல், இசை இசைத்தல், ஓவியல் வரைதல் என வீடியோவில் அத்தனை சாதனைகளையும் 2 வயது குழந்தை செய்து அசத்தியுள்ளார்.

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது தொடர்பாக பெற்றோர் கூறுகையில், ‘சத்குரு 100 நாள் பைக் பயணம் முடிக்கும் நாளில், நாங்களும் 100 வீடியோக்கள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். மகளின் திறமையை பார்த்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது பெருமையாக உள்ளது’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.