சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படைப்பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் சமீபத்தில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 35 பேர் வயதுவந்தவர்கள்இ மற்றும் ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்.
இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு சிலாபம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களுடன் வந்ததிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சரீரப் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சட்டவிரோத பயண ஏற்பாட்டைச் செய்த நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.