வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ‘வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில் உள்ள கடற்கரை இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள சாலையில், தன் மனைவி ஜில் பைடனுடன், அவர் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்தார். அப்போது, சாலையின் எதிரில் வந்தவர்கள் ஜோ பைடனை நோக்கி கையசைத்தனர். அவர்களிடம் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்த முயன்ற போது, ஜோ பைடன் தவறி கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த அவர், ‘எனக்கு எதுவும் ஆகவில்லை. நலமாக உள்ளேன்’ என்றார்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபருக்கு எந்த பிரச்னையும் இல்லை.மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,-அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 79, சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ‘வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெலவர் மாகாணத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.