கும்பகோணம் திருபுவனத்தில் தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் திருபுவனம் பகுதியை சேர்ந்த விவசாயியான ரமேஷ் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி வந்தார். அப்போது அந்த குப்பையில் இருந்த அதிக விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அவரின் கையில் கடித்தது.
இதனால் பதறிப்போன அவர் உடனடியாக பாம்பை அடித்துக் கொன்று ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
தன்னை இந்த பாம்பு தான் கடித்து விட்டது என்றும், எனக்கு வைத்தியம் பாருங்கள் என்றும் அவர் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அந்த பாம்பு இறந்து விட்டது என்று தெரிந்த பின்புதான் மக்கள் அமைதியாகினர். அதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.