நாடார்கள் முதல் அம்பானிகள் வரை.. தந்தையின் வணிகத்தினை சிறப்பாக செய்யும் 10 தொழிலதிபர்கள்..!

ஒவ்வொருவருக்கும் தங்களின் அப்பாக்கள் தான் முதல் ஹீரோவாக இருப்பார்கள். பலருக்கும் அவரவர் தந்தையே ரோல்மாடலாக இருப்பார்கள். அப்படிப்பட்ட தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள் சொலுவோமே.

இப்படி ஒரு அழகான நாளில், அன்பு தந்தைகளின் வணிகத்தினை சிறப்பாக செய்து வரும் இந்திய மகன்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த பட்டியலில் நாடார்கள் முதல் பிரேம்ஜிக்கள், அம்பானிக்கள் வரையில் பலரும் உள்ளனர். அவர்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

தமிழக அரசின் அடுத்த சூப்பர் திட்டம்.. பெண்களை தொழில் முனைவோராக்க ஊக்கம்..!

நாடார்கள்

நாடார்கள்

அந்த வகையில் நாம் இன்று முதலில் பார்க்கவிருப்பது ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான இவர், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனத்தினை வழி நடத்தி செல்லும் முதல் பெண் ஆவார். 2021ல் அவரின் தந்தையான ஷிவ் நாடார் தனது பதவியினை ராஜினாமா செய்த நிலையில், அவரின் மகளான ரோஷினி நாடார் சிறப்பாக நிறுவனத்தினை வழி நடத்தி வருகின்றார்.

அம்பானிக்கள்

அம்பானிக்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான திரும்பாய் அம்பானியின் மூத்த மகனான, முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார். முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளாக ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானியோ, இஷா அம்பானி மூன்று பேருமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குனர் குழுவிலும் உள்ளனர். இதில் இஷா ரிலையன்ஸ் ஜயோ மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷனையும், ஆகாஷ் அமானி ரிலையன்ஸ் ஜியோவினை நிர்வாகம் செய்து வருகின்றார்.

பிரேம்ஜி
 

பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி கடந்த 2019ல் ஓய்வு பெற்ற நிலையில், அவரின் மகன் ரிஷாத் பிரேம்ஜி வழி நடத்தி வருகிறார். அசிம் பிரேம்ஜியின் மற்றொரு மகன் தாரிக் பிரேம்ஜி எண்டோவ்மெண்ட் ஃபண்டின் துணைத் தலைவராக உள்ளார்.

பிரமல் குழுமம்

பிரமல் குழுமம்

அஞ்சய் பிரமல், பிரமல் குழுமத்தின் தலைவராவார். இவரது மகள் நந்தினி பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். பிரமல் குழுமத்தின் மருந்து வணிகத்தினையும் வழி நடத்தி செல்கிறார். ஆனந்த் பிரமல் பிரமல் குழுமத்தின் இயக்குனராவார். பிரமல் ரியால்டியின் தலைவரகாவும் உள்ளார்.

கோத்ரேஜ்

கோத்ரேஜ்

கோத்ரேஜ் நிறுவனம் 1897ல் அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் மூலம் தொடங்கப்பட்டது. தற்போது பிரோஜ்ஷாவின் குழந்தைகளான ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதிர் கோத்ரேஜ், அவர்களது உறவினர் ஜஷித் கோத்ரேக் ஆகியோரால் வழி நடத்தி செல்லப்படுகின்றது.

சன் பார்மா

சன் பார்மா

இந்தியாவின் முன்னணி பார்மாசிட்டிகல்ஸ் நிறுவனமாகும். இதன் தலைவர் திலீப் சாங்கவியாகும். திலீப் சாங்கவியின் மகன் ஆலோக் ஷ்ங்வி சன் பார்மாவின் வளர்ந்து வரும் சந்தைகளின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது மகள் விதி சல்கோகர் 2018ல் நுகர்வோர் ஹெல்த்கேர் வணிகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வொக்கார்ட்

வொக்கார்ட்

மருத்துவதுறையை சார்ந்த வொக்கார்ட் நிறுவனத்தினை தொடங்கியவர் ஹபில் கொராகிவாலா. 1967ல் தொடங்கப்பட்ட இந்த குழுவில் தற்போது அவரின் குழந்தைகளும் நிறுவனத்தின் குழுவில் உள்ளனர்.

ஹூசைஃபா கொராகிப்வாலா வொக்கார்ட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், முர்தாசா கொராகிவாலா வொக்கார்டின் எம்டியாகவும், ஜஹாபியா கொரோகிவாலா வொக்கார்ட் மருத்துவமனையின் எம்டியாகவும் உள்ளனர்.

சிப்லா

சிப்லா

குவாஜா அப்துல் ஹமீத் 1898ல் சிப்லாவை தொடங்கினார். அவருக்கு பிறகு அவரது மகன் யூசுப் ஹமீத்து 52 ஆண்டுகள் தலைமை தாங்கினார். தற்போது யூசுப்பின் மகன் எம்கே ஹமீத் தற்போது வணிகத்தினை வழி நடத்தி வருகின்றார். இவர் சிப்லாவின் மூன்றாம் தலைமுறை வாரிசாகும்.

பிகனெர்வாலா

பிகனெர்வாலா

லாலா கேதார் நாத் அகர்வால் 1947ல் பிகானரில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தார். சாந்தி செளக்கில் உள்ள அவரத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் காரமான தள்ளுவண்டி இன்று, மகன் ஷியாம் சுந்தர் அகர்வால் மற்றும் மணிஷ் அகர்வால் நடத்தும் உணவகங்களின் சங்கிலியாகும்

ஆகாஷ் இன்ஸ்டிடியூட்

ஆகாஷ் இன்ஸ்டிடியூட்

ஜேசி செளத்ரி ஆகாஷ் கல்வி நிறுவனத்தினை தொடங்கியவராகும். இப்போது பைஜூஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2006ல் இருந்து அவரது மகன் ஆகாஷ் செளத்ரி நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கினார். தற்போது வரையில் அங்கேயே இருந்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

from Nadars to premji, Ambanis – top 10 biggest father children run business in india

In this post we are going to look at 10 people from Nadars to Premjis and Ambanis who are doing their father’s business well.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.