நாளை என்ன வேலை: NATA தேர்வு குறித்தான முழுமையான வழிகாட்டல்!

பி. ஆர்க் படிப்பதற்காக ‘கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் நாட்டா நுழைவுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா மற்றும் நெடுஞ்செழியன் நடத்திய உரையாடலின் சிறுபகுதி இதோ…

கல்வியாளர்கள் நெடுஞ்செழியன் – ரமேஷ் பிரபா

NATA நுழைவுத்தேர்வைப் பற்றி விளக்குங்கள்…

2003 முதல் 2006 ஆண்டுகளில் 40 பேர் மட்டும் ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் 200 பேர் வரை சேர்க்கப்பட்டனர். ஆர்க்கிடெக்சர் படித்து முடித்து ‘கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சரில்’ பதிவு எண் வாங்கினால் மட்டுமே, கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியும். இந்த அனுமதி 40 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் மீதமுள்ள 160 பேர் பதிவு எண் வாங்காமல் படிப்பை பாதியில் நிறுத்தினர். இதனால் பல பெற்றோர்கள் புகார் அளிக்க துவங்கினார்கள். இதை சரிசெய்யவே நாட்டா நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது அரசு. பனிரெண்டாம் வகுப்பு முடித்து யார் படிப்பில் சேருகிறார்கள் அவர்களே ஐந்து வருடம் கழித்து பதிவு எண் வாங்குகிறார்களா என்பதை சரிபார்க்கவே இந்த நாட்டா நுழைவுத்தேர்வு.

ஆர்க்கிடெக் படிப்புக்கு வரையும் திறனும், வடிவமைக்கும் திறனும் முக்கியமானது. அதைப் பற்றி விளக்குங்கள்…

இதில் முக்கியமாக மாணவரின் காட்சிப்படுத்தும் திறன் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார்கள். ஒரு பொருளைப் பார்த்து அதை ஒரு தாளில் மறுஉருவாக்கம் செய்ய முடிகிறதா, எப்படி அந்தப் பொருளை உள்வாங்குகிறார்கள், எந்தக் காட்சி முனையிலிருந்து அதைப் பார்க்கிறீர்கள். அந்தப் பொருளை உள்வாங்கி எப்படி தாளில் வரைந்து எப்படி கொண்டு வருகிறார்கள் என்பவை முக்கியமாக பார்க்கப்படுகின்றன. வரையும் திறன் இந்தத் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது. அதனால் நன்றாகக் காட்சிப்படுத்தும் திறனுள்ளவர்கள் இத்துறையில் சிறந்து செயல்படுவார்கள்.

NATA

பெரும்பாலான நுழைவுத் தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிலையில் நாட்டா நுழைவுத்தேர்வு மட்டும் வருடத்துக்கு மூன்று முறை நடைபெறுவது ஏன் ?

இந்தத் தேர்வை ஒரு முறை வைப்பதே சிறந்தது. மூன்று முறை வைக்கும்போது மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. காரணம் ஒரு தேர்வில் மதிப்பெண்ணுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையில், இன்னொரு மாணவனுக்கு சேர்க்கை நடவடிக்கைகள் முடிந்து இருக்கும். ஜிஎஸ்டி வரியை எளிதாக்கி விட்டு, கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பான விஷயங்களை சிக்கலான நடைமுறையில் வைத்துள்ளோம். இதை எளிய நடைமுறையில் கொண்டுவந்தால் நிறைய பெற்றோர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. பண்ணக்கூடிய விஷயம்தான்.

B.Arch படிப்பை ஐந்து வருடம் நீட்டித்ததன் நோக்கம் என்ன; இதுவே மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்க வழிவகுக்காதா?

ஆர்க்கிடெக்சர் படிப்பில் அந்த காலத்திலிருந்தே வரைவதற்கும் கற்றுக்கொள்ளவதற்கும் நிறைய இருக்கும். பாடத்திட்டம் பரந்துபட்ட நிலையில் பல்வேறு வகைகளாக இருப்பதால், மாணவர்கள் சிறப்பு நிலைக்கு போகும் போது அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடச்சுமை அதிகமாக இருக்கும். ஆர்க்கிடெக்சர் பொருத்தவரை ஐந்து வருடத்தில் வரைவதில் நிறைய கற்றுக்கொள்ள இருப்பதால் முதலிலிருந்தே இதன் கால அளவை ஐந்து வருடமாக முடிவு செய்துள்ளார்கள். களத்திற்கு சென்று ஒரு பொருளைக் காட்சிப்படுத்தி அதை ஒரு தாளில் வரைந்து மறு உருவாக்கம் செய்து பார்த்தல் போன்ற சுழற்சி முறை பயிற்சி தேவைப்படுவதால் ஐந்து வருடம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிக்க NATA நுழைவுத் தேர்வு உள்ள அதே நேரத்தில் JEE தேர்வில் இன்னொரு தாள் எழுதினால் இந்த NATA தேர்வு தேவையில்லை என்ற குழப்பம் நிலவி வருகிறது. அது குறித்து விளக்குங்கள்…

JEE இரண்டாம் கட்ட தேர்வெழுதினால் NIT-யில் School of Planning Architecture நிறுவனங்களில் மட்டுமே சேர்ந்து படிக்க முடியும். இதற்கு NATA நுழைவுத்தேர்வு அவசியமில்லை. இதை தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் சேர்வதற்கும் NATA நுழைவுத்தேர்வு அவசியம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.