ரஷ்யாவை எதிர்க்க துணிந்தால், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை தான் என முன்னாள் சோவித் ஒன்றிய நாடுகளுக்கு கடும் மிரட்டல் விடுத்துள்ளார் விளாடிமிர் புடின்.
ரஷ்யாவுக்கு எதிராக திரும்பினால் உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, நட்பு நாடுகள் என்ற அந்தஸ்தையும் அவர்கள் இழக்க நேரிடும் என புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் டான்பாஸில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய ரஷ்ய சார்பு பகுதிகளை அரைகுறை-மாகாண பிரதேசங்கள் என்று கஜகஸ்தானின் ஜனாதிபதி விமர்சித்துள்ள நிலையிலேயே, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை குறிப்பிட்டு விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், 1991ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற கஜகஸ்தான் வரலாற்று ரஷ்யாவின் பகுதியாக இருந்தது என புடின் குறிப்பிட்டுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தை விடவும் வரலாற்று ரஷ்யா தான் கொண்டாடப்படவேண்டும் என புடின் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் தொடர்பில் புகழ்ந்து பேசிய புடின், உக்ரைன் கூட வரலாற்று ரஷ்யாவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய நாடு தான், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நமது நட்பு நாடல்ல என புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கஜஸ்கஸ்தானை புகழ்வது போல ரஷ்ய ஜனாதிபதி புடின் மிரட்டியுள்ளார் என்றே அந்த நாட்டின் நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு பிறகு விளாடிமிர் புடினின் இலக்கு கஜகஸ்தானாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்ல நட்பு நாடாக இருக்கும் மட்டும் நம் அனைவருக்கும் பாதிப்பில்லை என குறிப்பிட்டிருந்த புடின்,
மேற்கத்திய நாடுகளின் இனிப்பு பிரச்சாரங்களால் தலைகால் புரியாமல் நடந்தால், கண்டிப்பாக படையெடுப்போம், காரணம் நீங்கள் அரசமைத்துள்ள நிலம் எங்களுக்கு சொந்தமானது என புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் ரஷ்யா அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறது எனவும் புடின் தெரிவித்துள்ளார்.