மும்பை: நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் போன்ற பெரும்பாலான நாடுகளில் கட்டாய ராணுவ சேவை நடைமுறையில் உள்ளது. ராணுவத்தின் சேருவதன் மூலம் இளைஞர்கள் ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள். அவர்களின் தேசப் பற்று அதிகரிக்கும். ராணுவ பணி என்பதை வேலைவாய்ப்பு, பணம் சம்பாதிக்கும் தொழிலாக கருதக்கூடாது.
இந்த பணி நாட்டுக்கு ஆற்றும் சேவையாகும். ஏராளமான இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமைகளாக உள்ளனர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அக்னி பாதை திட்டம் இளைஞர்களை நல்வழிப்படுத்தும். இந்த திட்டத்தை வரவேற்கிறேன். இவ்வாறு நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.