பிரித்தானியாவின் பகுதியான ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள காப்பகத்தில் பணிபுரிந்த இளம்பெண் உயிரிழந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டும் வேலையை தொடர்ந்து செய்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெய்லர் வாட்டர்சன் (22) என்ற இளம்பெண் காப்பகம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக டெய்லரின் பெற்றோர் மனம் திறந்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், வேலையின் ஒரு பகுதியாக காப்பகத்தில் வாழ்பவர்கள் இறந்தபின்னர் அவர்களின் உடல்களை கழுவ வேண்டிய அல்லது குளிப்பாட்ட வேண்டிய பணியும் டெய்லருக்கு வந்தது.
Family Handout
இப்படி தொடர்ந்து செய்து வந்ததால் அது அவரின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்தது.
முக்கியமாக கொரோனா சமயத்தில் பலரும் அடுத்தடுத்து உயிரிந்தனர்.
தான் அன்பாக பழகியவர்களின் உடலை குளிப்பாட்டியது டெய்லருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தனது உயிரை மாய்த்து கொண்டார்.
சில நாட்கள் எங்களிடம் வந்து நான் எத்தனை சடலங்களை குளிப்பாட்டுகிறேன் தெரியுமா என மிரட்சியுடன் கேட்பார்.
அந்த அளவுக்கு மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருந்தார் என அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என கூறியுள்ளார்.
Facebook / Beautiful Inside & Ou