பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன், புலம்பெயர்ந்த தமிழர்கள், வடக்கில் உள்ள தமது தாயகத்திற்கு திரும்பி, முதலீடுகளை மேற்கொண்டு புதிய தொழில்களை ஆரம்பிக்குமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்தார்.
பலாலி விமான நிலையத்தை நேற்று பார்வையிட்ட பின்னர இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.