பேருந்தில் இளம் பெண்ணை உயிருடன் கொளுத்திய கனேடியர்: வெளியான பெயர் உள்ளிட்ட தகவல்கள்


கனடாவின் ரொறன்ரோவில் பேருந்தில் பெண் ஒருவரை உயிருடன் கொளுத்திய 33 வயது கனேடியர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியது.
குறித்த வழக்கில் சிக்கிய நபர் ரொறன்ரோ பகுதியை சேர்ந்தவர் எனவும், Tenzin Norbu என்ற 33 வயது நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் மீது கொலை முயற்சி வழக்கு மட்டுமின்றி, ஆயுதம் கொண்டு தாக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சனிக்கிழமை ரொறன்ரோ நீதிமன்றத்தில் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு அவர் மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் இளம் பெண்ணை உயிருடன் கொளுத்திய கனேடியர்: வெளியான பெயர் உள்ளிட்ட தகவல்கள்

வெள்ளியன்று, கிப்லிங் அவென்யூ மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள கிப்லிங் சுரங்கப்பாதை நிலையத்திற்கு சுமார் 12:30 மணியளவில் ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

பெண் ஒருவர் ஆண் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், தொடர்புடைய பெண் மீது அந்த நபர் திராவகம் ஒன்றை வீசிவிட்டு நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார்.

இதில், குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாலும், அவரது தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர் என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.