For Agnipath entry, applicants have to prove they didn’t take part in arson, protests: Military leadership: ஆயுதப் படைகளுக்கான மத்திய அரசின் புதிய ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிரான எந்தவொரு தீ வைப்பு அல்லது போராட்டத்திலும் தாங்கள் பங்கேற்கவில்லை என்று உறுதியளிக்க வேண்டும் என்று ராணுவத் தலைமை கூறியுள்ளது.
“இந்திய ராணுவத்தின் அடித்தளம் ஒழுக்கம். தீ வைப்புகளுக்கும், வன்முறைகளுக்கும் இடமில்லை. அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தனிநபரும் தாங்கள் போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். போலீஸ் சரிபார்ப்பு 100 சதவீதம் அவசியம், அது இல்லாமல் யாரும் சேர முடியாது” என்று ராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், “விண்ணப்பதாரர்களுக்கு எதிராக ஏதேனும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் ராணுவத்தில் சேர முடியாது… விண்ணப்பதாரர்கள் தீ வைப்புச் சம்பவம் அல்லது போராட்டத்தில் ஈடுபடவில்லை சான்று சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அவை காவல்துறை மூலம் சரிபார்ப்பு செய்யப்படும்.” என்றும் அனில் பூரி கூறினார்.
புதிய இராணுவ ஆட்சேர்ப்புத் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு முப்படைகளின் மாநாட்டில், ஆயுதப் படைகளில் பெருமளவில் சேர்வதற்கு இந்த கொள்கை ஏன் தேவை என்பது விளக்கப்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்ற இந்த அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: நளினி விடுதலைக்கு எதிராக தி.மு.க அரசு: சீமான் கண்டனம்
“நமது படைகளை எவ்வாறு இளமையாக மாற்றுவது என்பது குறித்து நாங்கள் நீண்ட காலம் விவாதித்தோம். வெளிநாட்டுப் படைகளையும் ஆய்வு செய்தோம். எங்களுக்கு இளைஞர்கள் வேண்டும். இளைஞர்கள் ரிஸ்க் எடுப்பவர்கள், அவர்களுக்கு ஆர்வம் உண்டு. அவர்களிடம், ஜோஷ் மற்றும் ஹோஷ் சம விகிதத்தில் உள்ளன,” என்று லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறினார்.
ராணுவ ஆட்சேர்ப்புக்கான இயக்கங்கள் ஆகஸ்ட் முதல் பாதியில் தொடங்கும் என்றும், டிசம்பர் முதல் வாரத்தில் முதல் தொகுதி அக்னிவீரர்கள் வருவார்கள் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் சி பன்சி பொன்னப்பா தெரிவித்தார். இரண்டாவது தொகுதி அக்னிவீரர்கள் பிப்ரவரிக்குள் வந்துவிடுவார்கள். ராணுவம் 83 ஆள்சேர்ப்பு இயக்கங்களை நடத்தும் என்றும், நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் தொடும் என்றும் அந்த மூத்த அதிகாரி கூறினார்.
கடற்படையைப் பொறுத்தவரை, “அக்னிவீரர்களின்” முதல் தொகுதி நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பயிற்சிக்காக ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்காவிற்கு வந்து சேர்வார்கள்.
இந்த ஆண்டு டிசம்பரில் விமானப்படை “அக்னிவீரர்கள்” முதல் தொகுதியை பதிவு செய்து, அதே மாதத்தில் பயிற்சி தொடங்குவார்கள்.