முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை (18) இரவு 8.00 மணியளவில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைத் குழப்பும் முகமாக, கட்டுக்கடங்காத கும்பல் ஒன்றினால் அதிலும் மதுபோதையில் இருந்த குழு ஒன்றினால் இராணுவத்தினர் மீது திட்டமிட்ட வகையில் போத்தல்கள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை முறியடிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது.
இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததன் மூலம் பதற்றமான சூழ்நிலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினாரல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று இராணுவத்தினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் சீர்குலைக்க சில சந்தேகத்திற்கிடமான நபர்களினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட முயற்சி என்று முதற்கட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் மேலதிக விசாரணைகளுக்காக விஸ்வமடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம்