இந்தியாவில்தான் சக்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்று ஆய்வு கூறியது. நீரிழிவு நோய் நாம் அஞ்சும் நோய்யாக மாறிவிட்டது. மேலும் குணப்படுத்த இயலாத நோயாகவும் இது இருக்கிறது. நமது கணையம் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க இயலாமல் போவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ரத்ததில் சக்கரை அளவு அதிகமாகிவிடும். இந்நிலையில் சரியான உணவு முறை, உடல் பயிற்சி நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது. நமது உணவில் நட்ஸ் எடுத்துகொள்வதால் இய்றகையான முறையில் நமது ரத்தில் இருக்கும் சக்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். நாம் முக்கியமாக சேர்த்துகொள்ள வேண்டிய நட்ஸ் வகைகளை பார்க்கலாம்.
வால்நட்ஸ்
2 ம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் உணவில் வால்நட் சேர்த்துகொண்டால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிக நார்சத்து இருப்பதால், வழக்கமாக நாம் சாப்பிட்டபின் அதிகமாக உயரும் சக்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது
பாதாம்
அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளின் பதாம் சேர்த்து சாப்பிட்டால் ரத்தில் இருக்கும் சக்கரை அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நாம் சப்பிட்டபின் ரத்தில் அதிகரிக்கும் சக்கரை அளவை இது தடுத்து நிறுத்தும். மேலும் இன்சுலின் செயல்பாட்டை இது மேலும் நன்றாக உதவும்.
முந்திரி
முந்தியில்தான் குறைந்த கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது. மேலும் நமது ரத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க முந்திரி உதவுகிறது.