மூட்டை மூட்டையாக 10 ரூபாய் காயின்.. கார் வாங்க சென்ற தருமபுரி இளைஞர்.. ஏன் இப்படி?

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி இன்றும் பலதரப்பினரிடையே இருந்து கொண்டு தான் உள்ளது. ரிசர்வ் வங்கி இது குறித்தான தெளிவான விளக்கத்தினை கொடுத்திருந்தாலும், இன்றும் சில இடங்களில் வாங்கப்படுவதில்லை எனலாம்.

அப்படி ஒரு நிகழ்வுதான் தருமபுரி மாவட்டத்தில் நடந்துள்ளது, தருமபுரியை சேர்ந்த அரூரை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெற்றிவேல்.

இவர் மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தவிர நாட்டு வைத்தியமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

விளையாட்டு பொருளான ரூ.10 காசு

வெற்றிவேல் தான் வசித்து வரும் பகுதியில் 10 ரூபாய் நணயங்களை செல்லாது என சிறுவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தி வந்ததை கவனித்து வந்துள்ளார். இந்த நாணயத்தினை அனைவரையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதனை சிறிது சிறிதாக சேர்த்து வைக்க தொடங்கியுள்ளார். அது மட்டும் அல்ல, சேர்த்து வைத்த காசினை வைத்து ஒரு காரினையும் வாங்க திட்டமிட்டுள்ளார்.

ரூ.10 நாணயங்கள் சேகரிப்பு

ரூ.10 நாணயங்கள் சேகரிப்பு

இதற்காக பலதரப்பில் இருந்தும் 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக கடைகள், வணிக வளாகங்கள், கோவில்கள், சாலையோர கடைகள் என பல இடங்களில் இருந்து காயின்களை வாங்கி சேகரித்துள்ளார். இந்த காயின்களை மூட்டையாக கட்டிக் கொண்டு, சேலத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றிற்கும் சென்றுள்ளார்.

மூட்டை மூட்டையாக காசு
 

மூட்டை மூட்டையாக காசு

செய்வதறியாது திகைத்த கார் ஷோரூம் அதிகரிகளும் வங்கி மேலதிகாரிகளுடன் கலாந்தாலோசித்து, அதன் பின்னரே வாங்க முன் வந்துள்ளனர்.

இந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு, சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து, வாகன ஷோரூமில் தனது உறவினர்களுடன் வந்து கொட்டியுள்ளார் வெற்றி வேல்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி வரும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இப்படி 10 ரூபாய் நாணயத்தினை கொடுத்து கார் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார் வெற்றிவேல். இது நிச்சயம் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Dharmapuri youth collected 10 rupees coins and bought a car worth Rs 6 lakh

youth from Dharmapuri collected 10 rupees coins and bought a car worth Rs 6 lakh

Story first published: Sunday, June 19, 2022, 23:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.