ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் ரோஷன்(26).
சென்னை பெரம்பலூரை சேர்ந்த ரோஷனின் நண்பர் யுவராஜ் நேற்று அரக்கோணம் வந்த நிலையில் இருவரும் காவனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று மது அருந்தி உள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த கிணற்றில் இருவரும் குளித்தபோது நீச்சல் தெரியாத யுவராஜ் நீரில் மூழ்கியுள்ளார். இவரை மீட்க முயன்ற ரோஷனும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், இன்று காலை காவனூர் விவசாய கிணற்றின் கரையில் இருவரும் உடல்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் அரக்கோணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.