மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துக்காக மூன்று கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
விரைவில் தரவுகளை ஆய்வு செய்து முடித்த பின்னர், அடுத்த மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரிடம் தரவுகளை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் அனுமதி கிடைத்தால், உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட, மூக்கு வழியே செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பு மருந்து இதுவாக இருக்கும் என கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM