உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் su-25 வீழ்த்தப்பட்டதை அடுத்து அதன் விமானி உக்ரைனிய ராணுவ படை வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரானது தலைநகர் கீவ்வை கைப்பற்ற தவறியதை தொடர்ந்து, ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கப்பட்டு கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான கிழக்கு உக்ரைனிய நகரங்கள் மீதி பீரங்கி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் மற்றும் வான் தாக்குதல் என அனைத்து விதமான போர் ஆயுதங்களையும் ரஷ்ய ராணுவ படைகள் பயன்படுத்தி உக்ரைனில் அங்குலம் அங்குலமாக முன்னேறி வருகின்றனர்.
Pilot of the downed Russian Su-25 in the hands of the Armed Forces of Ukraine. pic.twitter.com/BxLdFzShD7
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 18, 2022
இந்தநிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய போர் விமானம் su-25 ஒன்று, உக்ரைனிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானியையும் உக்ரைனிய ராணுவ வீரர்கள் உடனடியாக போர் கைதியாக சிறைப்பிடித்துள்ளனர்.
இதுத் தொடர்பாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், அரை நிர்வாணமாக தள்ளாடிய படி நடந்து போகும் ரஷ்ய போர் கைதியின் கண்கள் மஞ்சள் நிற மறைப்பான்களால் மறைக்கப்பட்டு உக்ரைனிய வீரர்களால் அவர் அழைத்து செல்லப்படுகிறார்.
Pilot of downed Russian Su-25 capitulated from the aircraft and was taken prisoner in Donetsk Obl
“Who is here?”🇷🇺pilot asked. “Here are Black Zaporozhtsi (Cossacks),” fighters of 72nd Brigade named after Black Zaporozhtsi, who reported the news, replied https://t.co/iSzMqFCNGc pic.twitter.com/xVi6rsyH6R
— Euromaidan Press (@EuromaidanPress) June 19, 2022
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படையின் முற்றுகையில்…பிடிபட்டார் உக்ரைனிய தளபதி: RIA தகவல்
சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய போர் விமான வீரர், யார் இங்கு இருக்கீறிர்கள் என்று கேட்டதற்கு, உக்ரைனிய வீரர்கள் இது பிளாக் ஜாபோரோஜ்ட்ஸி (கோசாக்ஸ்) என்று அழைக்கப்படும் உக்ரைனின் 72 வது படைப்பிரிவின் போராளிகள் எனத் தெரிவித்தனர்.