10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 பேர் எழுதியுள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 பேர் எழுதியுள்ளனர். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாவதால் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளவும் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஆவலாக உள்ளனர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு அனுப்பவும் இணைய தளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை இந்த இணையதள முகவரிக்கு சென்று உங்கள் பொதுத் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“